Sunday, May 30, 2010

குருவிக்கூடு

மறப்பேனா அன்னையே!
என் பசியையும் ருசியையும் பார்வையிலேயே
தெரிந்துகொள்ளும் உன் பாசத்தை...
என் கழுத்துவரை அன்னமிட்டும் "இன்னும் கொஞ்சம்"
என இன்றுவரை நீ கெஞ்சுவதை....
என் நெற்றிதுளிகல் எட்டி பார்க்கும்முன்
தொட்டு துடைக்கும் உன் புடவை முந்தானையை
மறப்பேனா அன்னையே!
உன் கரம் மீது கண்ணுறங்கிய அந்த சில நாட்களை!

மறப்பேனா தந்தையே!
அதிகலை மூன்றுக்கும் எனக்காக தனியாக
நீ காத்திருந்த காலங்களை...
என் தலையருகே விசிரியபடி நான் கண்ணுறங்க
நீ கண்விழித்த இரவுகளை...
எனக்காக சிரம்பட்டு,எனக்காக கடன்பட்டு
நீ பட்ட கஷ்டங்கள்...
மறப்பேனா தந்தையே!
என் வெள்ளை சட்டை உன் வியர்வையில் சலவை செய்தது என்பதை!

மறப்பேனா அண்ணனே!
ஓரு தட்டில் ஒன்றக நாம் பசியாரிய நாட்களை!

மறப்பேனா தம்பியே!
உன் மழலை மொழியை மணிக்கனக்காய் ரசித்ததை!

முள்ளின் மீதே தூங்கினாலும்
குத்தவில்லை இந்த குருவிக்கூட்டில்..!

என்ன தவம் செய்தேனொ,
வரங்களுடனே வாழ்கிறேன்..!

Saturday, May 15, 2010

ஏமாற்றம்

சலிக்காமல் எனை சந்திக்கும் ஏமாற்றமே உன்னால்...

கண்ணுக்கும் தெரியாமல் அழுகின்றேன்
முன்போல மூச்சிவிட மறக்கின்றேன்.

கண்ணீரின் வெப்பத்தில் கறைகின்றேன்
என் கவலைகளை கவிதையாய் கறைக்கின்றேன்.

சிரிக்கின்ற சில நாளை பறிக்கின்ற நீயே
என் இதயத்தின் துகள்களை எண்ணி எனக்கு சொல்லு...!

இமயமாய் கனக்கும் இத்தனை வலிகளை
எழுதுகோளின் முனைவரை எடுத்துவர முடியவில்லை...!

எத்தனை முறைதான் விழுவேன் ! எத்தனை முறைதான் அழுவேன்!
அத்தனையும் மறக்கிறேன்..அடுத்தவருக்காக சிரிக்கிறேன்..!

விடுகதையாய் இருக்கும் இந்த வாழ்க்கையில் ஏனோ
தொடர்கதையாய் துரத்துகிறது இந்த (ஏ)மாற்றங்கள்...!

-அருண்குமார்

Saturday, May 1, 2010

முத்தம்

அர்த்தங்கள் புரியாத...அம்மாவின் முத்தம்
குறிஞ்சிபூ பூத்ததுபோல்...அப்பாவின் முத்தம்

வெண்மீசை குத்தும்சுகம்...தாத்தாவின் முத்தம்
சலிக்காத சந்தோஷம்...பாட்டியின் முத்தம்

உயிரோடு உறைந்துவிடும்...உடன்பிறப்பின் முத்தம்

கன்னத்தில் காயங்கள்...காதலியின் முத்தம்
கண்களில் ஈரங்கள்...காதலனின் முத்தம்

மறித்தாலும் மறக்காது...மனைவியின் முத்தம்
கடைசிவரை கசக்காது...கணவனின் முத்தம்

வர்னிக்க தெரியவில்லை...குழந்தையின் முத்தம்
வர்னிக்க தேவையில்லை...அழும் நேரம் முத்தம்

நம் இதயத்தை இயன்றவரை இடம்மாற்றிக்கொண்டால்
இந்த முத்தங்கள் நம் வாழ்வில் சத்தங்கள் போடும்..!

தமிழ் குல(ள)த்து தாமரைகள்

I dedicate this poem to all Tamil girls ...proud to be a Tamil girl...:)


தமிழ் குல(ள)த்து தாமரைகள்

உங்களின் எண்ணெய் மின்னும் கருங்கூந்தலை கட்டிக்கொண்டபிறகு
மல்லிகைக்கும் மறுபிறவியில் ஆசை வந்தது

உங்கள் கொலுசுகளின் கொஞ்சலை காதோரம் கேட்க
பூமியும் காலம்காலமாய் காலடியில் கிடக்கிறது

நிறம் பூசா உங்கள் உதட்டழகை கண்டால்
நிறம் பூசிய உதடுகள் சிரிக்க சிந்திக்கும்

நீங்கள் கைமூடி சிரிக்கும் சிரிப்பழகை கண்டால்
அழகென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் புரியும்

உங்கள் வெட்கத்தின் அழகை ஒருமுறை கண்டால்
உலக அழகி தோல்வியில் தலைகுனிந்து போவாள்

உங்களின் ஒப்பற்ற தாயன்பை ஒருமுறை கண்டால்
இறைவனும் உங்கள் மடியில் மழலையாய் மாறுவான்.