Wednesday, March 16, 2011

பரம்பொருளே...

இருபத்தைந்தாண்டுகாலம் இனிமையாய் நகர்த்திய
இறைவா உன் மலர்பாதம் வணங்குகிறேன்.

பிறக்கவைத்தாய் , நடக்கவைத்தாய் ,
பேசவைத்தாய் , சிரிக்கவைத்தாய் ,
அழவைத்தாய் , அன்புவைத்தாய் ,
குறையொன்றை எதிலும் , கண்டதில்லை இறைவா!


சரி எது , பிழை எது தெரியவில்லை
பழி எது , பாவம் எது புரியவில்லை
அதிர்ஷ்டமா , துருதிர்ஷ்டமா அரியவில்லை
விதியா , சதியா விளங்கவில்லை
நான் என் செய்வேன் அப்பனே!
சாதிக்க வைத்தாலும் உன் காலடியில் விழுவேன்!
சோதித்து விட்டாலும் உன் காலடியில் விழுவேன்!

நான் சரிகின்ற நேரத்தில் என் இடைபிடித்து
தூக்கிவிட உடனிருக்க வேண்டுகிறேன்.

இனி அரசனாய் மாறி நான் அகிலத்தை ஆண்டாலும்
அன்னாடம்காய்ச்சியாய் அடிபட்டு மாண்டாலும்
என் நெஞ்சத்தில் உன் நினைவை
நீக்காமல் நீயே காப்பாயே இறைவா!

சரணடைந்துவிட்டேன் ! என் சகலமும் நீயே !
மனமுருகினின்றேன் ! உன் மகிமையே மகிமை !

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில்
இந்த பிண்டத்தை நீயே வழி நடத்து பிதாவே.