Sunday, April 17, 2011

வரம்

தென்றலை அதிகமாய் ஆக்கிரமிக்கும்போதும்
கண்ணாடியில் கன்னம் ஆப்பில்போல் தெரியும்போதும்
உடல்பருமனை காதலிக்கவே தோன்றுகிறது!

வாசற்படிகளில் தலை நிமிர்ந்து நடக்கும்போதும்
குன்றிய அறைகளில் கால் நீட்டி படுக்கும்போதும்
உயரக்குறைவு உண்மையிலேயே இனிக்கிறது!

இள நீரின் இளமையை எண்ணிப்பார்க்கும்போதும்
சில்லென்ற மழைத்துளி நேராய் தொடும்போதும்
வழுக்கைதலையும் வரமாகவே தோன்றுகிறது!

கடவுளின் சிலையை காண்கின்றபோதும்
புன்னகையில் பற்க்கல் தனியாக ஜொலிக்கும்போதும்
கருப்பு நிறமும் கலக்கலாகவே தெரிகிறது!

வருத்தம்தான்! வரங்களையெல்லாம்
குறைகளாக நினைத்து விட்டொமேயென்று!

--அருண்குமார்