Thursday, December 30, 2010

புன்னகை:)

மனிதப்பிறவியின் அடையாள அட்டையே
என் மனதை உலகிற்கு பிரதிபோட்டு காட்டுகிறாய் .

சின்னதாய் ஒருமுறை ,சிக்கனமாய் சிலமுறை ,
சத்தமாய் பலமுறை ,வெட்கமாய் சிலமுறை ,
எத்தனை பிறவியை எனக்காக எடுக்கிறாய் ...

புன்னகை பெண்ணிடம் பொன்னகை பார்த்ததில்லை .
சில கண்ணிலும் புன்னகை மின்னலாய் பார்க்கிறேன் .

கவிதையாய் உன்னை கரையேற்றி விட்டால்
என் கற்பனை கரைந்து காணாமல் போகும் ,
அகவே , மிச்சத்தை மனதில் அசைபோட்டு கொண்டு
அடுத்தவரிடம் உன்னை அறிமுகம் செய்வேன் .
---அருண்:)

Saturday, December 4, 2010

அன்புள்ள மகனுக்கு..

உன் நேரத்தை வீணடிக்க விரும்பாதபோதும்
என் சோகத்தை சொல்ல எனக்கு வேறாரும் இல்லை.

தள்ளாத வயதில் தனியாக ஏனோ
பொல்லாத உலகில் போராட முடியவில்லை.

உன் சிரிப்பொலியை கேட்ட சுவர்களுக்கிடையே
என் எதிரொலியை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மாதம் ஒருமுறை உன் குரல் கேட்கும் இன்பம்
மாதாமாதம் நீ அனுப்பும் காகிதங்களில் இல்லை.

நீ தொட்டு சென்ற பொருள்களையெல்லாம்
தடவிப்பார்த்தே காலம் தள்ளுவேன்.

சத்தில்லா இந்த சருகான தேகம்
சட்டென்று ஒரு நாள் சாய்ந்தாலும் சாயும்.

எனை "ஈ" மொய்க்கும் செய்தியை காதோரம் கேட்டால்
"அம்மா" என்றழுது ஓடோடி வருவாயா!!!!

இப்படிக்கு
உன்னை பெற்றெடுத்த மலடி.

பூக்கள்

" பூக்கள்" எழுதும்போதே வாசத்தை உணருகிறேன்.

உன் பெயரை கூட என் பேனா முள் குத்திவிடகூடாது .


ஏய், காற்றின் காதலியே,

என்னையும் ஒரு முறை உன் ஓரக்கண்ணில் பாறேன் ...


அடடா! எத்தனை பெருந்தன்மை!

உன்னை பறித்த பிறகும் ,எங்களை பார்த்து சிரிக்கிறாயே.


அடடா! எத்தனை தியாகம்!

உன் கண்ணீரையும் எங்களுக்கு பன்னீராக்குகிறாயே !


ஓப்புக்கொள்கிறோம். உன் ஒரு நாள் வாழ்க்கையின் முன்

எங்கள் ஓரு ஜென்ம வாழ்க்கை தோற்றுப்பொய்விட்டது !


புன்னகை பூக்களுடன்

அருண்:)