Tuesday, June 21, 2011

எப்படி இருப்பாய் மனமே!

சட்டென்று சிலசமயம் பட்டென்று கரைவதால்
பனிகட்டி போல் நீ இருப்பாயோ!

காய்ச்சிய ஈட்டியை கட்டியனைத்து தூங்குவதால்
கருங்கல்லாய் நீயும் இருப்பாயோ!

சிந்தனை கூட்டில் சிறைபட்டுவிட்டதால்
கூண்டுக்கிளியாய் கூச்சலிடுகிறாயோ!

இல்லை இதயக்கூட்டில் பூக்களை தேடி
பட்டாம்பூச்சியாய் பறக்கிறாயோ!


கோவில் போல் உள்ளாயோ ,உள்ளிருக்கும்
சிலைபோல் உள்ளாயோ!

வெறும் காற்றாக நீ இருக்க வாய்ப்பே இல்லை,
காற்றுக்குள் ஏது இத்தனை ரகசியம்...

எப்படிதான் இருப்பாய் என் மனமே?
இப்படிதான் இருப்பாய் என
தெரியாமல் இருப்பதே ஒரு சுகம்தான்.
-அருண்