Sunday, January 30, 2011

மழை

பூமியின் தாய்ப்பாலே!

என்ன வரம் பெற்றாயோ,
பூக்களை குளிப்பாட்டும் பாக்கியம் உனக்கு!

என்ன தவம் செய்தேனோ,
உனை வர்ணித்து எழுதும் பாக்கியம் எனக்கு!

ஒவ்வொரு புல்பூண்டுக்கும் அன்னமிட்டாய்
அத்தனையீலும் உன் ரத்தம் ஓடுகிறது.

எப்படி சொல்வேன் உன் மகிமையை!
நீ தொட்டால் மண்கூட வாசம் வீசுகிறது,
கல்லுக்குள்ளும் ஈரம் பாய்கிறது.

நான் வாழும் இந்த நாகரீக வாழ்க்கை
நீ தந்த பிச்சை என்பதை நான் மறந்ததில்லை.

என் மறுபிறவியை உனக்கு தந்தால்
ஒரு துளியாக என்னை சேர்த்துக்கொள்வாயா!
ஆவலுடன்,
அருண்

No comments:

Post a Comment